Back

Explore every episode of the podcast SBS Tamil - SBS தமிழ்

Dive into the complete episode list for SBS Tamil - SBS தமிழ். Each episode is cataloged with detailed descriptions, making it easy to find and explore specific topics. Keep track of all episodes from your favorite podcast and never miss a moment of insightful content.

Rows per page:

1–50 of 1,112

TitlePub. DateDuration
மதுபானத்திற்கு விருது பெற்ற தமிழர் !!24 juil. 202500:13:04
தேநீர் அருந்தியிருப்பீர்கள்.... வொட்கா எனும் மது பானத்தைக் கூட அருந்தியிருப்பீர்கள். ஆனால், இரண்டையும் கலந்து பருகியிருக்கிறீர்களா? அது சாத்தியமா என்று மற்றவர்கள் சிந்திக்க முதலே, ஆஸ்திரேலியாவின் முதல் தேநீர் கலந்த வொட்கா எனும் மதுபானத்தைத் தயாரித்து, அதற்காக விருதுகளும் பெற்று சாதனை புரிந்துள்ளார் இரமணன் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் பானத்தைத் தயாரிக்கும் கருத்துருவாக்கம் எங்கே ஏற்பட்டது. அதைத் தயாரிப்பதில் ஏதாவது சவால்களை எதிர்கொண்டாரா, இதற்கான ஆதரவு எப்படியிருக்கிறது போன்ற குலசேகரம் சஞ்சயனின் பல்வேறு கேள்விகளுக்கு இரமணன் 2016ஆம் ஆண்டில் பதில் தந்திருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
UK போலவே, ஆஸ்திரேலியாவிலும் வாக்குரிமை வயதை 16 ஆக குறைக்க வேண்டிய அவசியமுள்ளதா?24 juil. 202500:09:08
UK-வில் தற்போது வாக்களிக்க தகுதியான குறைந்தபட்ச வயதை 16 ஆக குறைக்கும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. UK போன்று இளைய தலைமுறையின் வாக்கு உரிமையை குறைக்க ஆஸ்திரேலியா தயங்குவது ஏன்? இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
NSW போக்குவரத்துத் துறையில் சுமார் 950 பணியிடங்கள் நீக்கம்24 juil. 202500:05:08
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
Fear, vigilance and polarisation: How antisemitism is impacting Jewish Australians - SBS Examines : ஆஸ்திரேலியாவில் நிலவும் யூத விரோதம் எப்படி தாக்கம் ஏற்படுத்துகிறது?23 juil. 202500:07:18
Many in Australia’s Jewish community say political polarisation is fuelling a new wave of antisemitism. How are Jews responding in the face of high-profile incidents of hate? - 'வெறுப்பை புரிந்து கொள்வது' என்ற இந்த தொடரில், இன்றைய ஆஸ்திரேலியாவில் யூத விரோதத்தின் தாக்கத்தை நாம் ஆராய்கிறோம்.
தீர்வுகள் ஏதுமின்றி தொடரும் காணமலாக்கப்பட்டோர் பிரச்சினை23 juil. 202500:09:46
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்டன. இருந்தபோதிலும் யுத்த காலப்பகுதியில் அதற்கு பின்னரும் வலிந்துகாணாமலாக்கப்படடோர் விவகாரத்திற்கு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் வடக்கு - கிழக்கு காணாமலாக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களுடன் உரையாடுகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?23 juil. 202500:02:57
விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் எவை என்ற புதிய பட்டியலை Henley & Partners நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செம்மணியில் மீண்டும் மனித புதை குழிகள்: நியாயம் கேட்கும் குரல்கள்23 juil. 202500:16:20
வட இலங்கையின் அமைதியான கிராமமான செம்மணி, சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளால் மீண்டும் சர்வதேச ஊடகக் கவனத்தை ஈர்த்துள்ளது. 1990களின் இறுதியில் இவ்விடத்தில் முதல் முறையாக கிடைத்த புதை குழிகள், இலங்கையின் உள்நாட்டுப் போரின் அடக்கு முறைகளை உலகுக்கு வெளிச்சமிட்டிருந்தன – கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், வரலாற்றின் இருண்ட கட்டங்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், செம்மணி மீண்டும் கவனத்துக்கு வருகிறது. இம்முறை, எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கட்டுமானத் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகளின் பேரில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 65ற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அதில் சில பச்சிளம் குழந்தைகளுக்குரியவை – பாடசாலைப் பைகள், பொம்மைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், பல வருடங்களாகப் பதில்கள் இல்லாமல் காத்திருக்கின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் புலம்பெயர் சமூகங்கள், இந்த விவகாரம் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. செம்மணி, தீராத காயங்களை நினைவூட்டும் இடமாகவும், வரலாற்று பொறுப்புக்கூறலைக் கோரும் சமூகத்தின் கூட்டு நினைவாகவும் நிற்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
கன்பராவில் பழமையும் புதுமையும் ஒன்றிணையும் 48-வது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!23 juil. 202500:07:06
லேபர்க் கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் 48வது நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதில் சுமார் 40 அரசியல்வாதிகள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் வயதான தொழிலாளர்கள் - ஆய்வு முடிவு23 juil. 202500:04:37
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
ஆஸ்திரேலியாவில் எளிதாக வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?22 juil. 202500:15:49
ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்துள்ள Migrants – குடியேற்றவாசிகள் வேலை தேடத் தொடங்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நேர்முக தேர்வுக்கு அழைப்பு வர செய்ய வேண்டியவை, Qualificationகளை - வெளிநாட்டு தகுதிகளை ஏற்கவைக்க செய்யவேண்டியவை என்று பல தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் Talent Acquisition Partner எனும் பணியில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் ஸ்வப்னா ராகவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?22 juil. 202500:06:19
இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பில் எதிரணி உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு வகையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியர்களுக்கு விரைவில் சாத்தியமாகலாம்22 juil. 202500:02:46
ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்த வேலை நாட்கள் மற்றும் கூடுதல் விடுமுறைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியை சில தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்: காசா போரை முடிவுக்குக் கொண்டுவர பன்னாட்டு அழைப்பு22 juil. 202500:04:27
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
டாஸ்மேனிய மாநில தேர்தல்: யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்?21 juil. 202500:07:50
Tasmania மாநிலத்தின் Premier Jeremy Rockliff மீது ஜூன் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் அறுதியாக எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை என்று, இதுவரை வெளிவந்த முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
நாளைய நாடாளுமன்ற அமர்வில் முதல்முறையாக பங்கேற்கும் 40 புதிய உறுப்பினர்கள்!21 juil. 202500:04:45
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
தனி நாடு கோரும் New Caledonia வுக்கு புதிய அதிகாரங்களை பிரான்ஸ் தருவதன் பின்னணி என்ன?21 juil. 202500:11:03
சுதந்திர நாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த New Caledonia பிராந்தியத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கப்போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த பின்னணியில் New Caledoniaயின் வரலாற்றையும், அது எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு20 juil. 202500:09:17
நில மோசடி வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி; புதிய சர்ச்சையில் சீமான் - பெண்களை இழிவாக பேசி வருவதாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புகார்; காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு - வலுக்கும் கண்டனங்கள்; - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு19 juil. 202500:05:48
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 – 19 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
வருமான வரம்பு உயர்த்தப்படுவதால் Centrelink சலுகைபெற பலர் தகுதிபெறுவர்!18 juil. 202500:03:32
ஆஸ்திரேலியாவில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான சொத்து மற்றும் வருமான வரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
காசாவின் ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேலின் தாக்குதலில் மூன்று பேர் மரணம்18 juil. 202500:04:03
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 18/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
What is a Justice of the Peace? When do you need one? - உங்கள் ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு JP ஒருவரைக் கண்டுபிடிப்பது எப்படி?18 juil. 202500:09:54
At some stage you will probably need help from a Justice of the Peace. It may be to prove your identity, to make an insurance claim or to certify copies of your legal documents in your language. JPs are trained volunteers who play a crucial role in the community by helping maintain the integrity of our legal system. So what exactly does a JP do and where can we find one when we need their services? - ஆஸ்திரேலியாவில் ஒரு Justice of the Peace- JPயின் பணிகள் எவை? உங்களுக்கு அவர்களின் சேவைகள் தேவைப்படும்போது ஒருவரை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
Debit & credit cardக்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை ரத்துசெய்ய RBA நடவடிக்கை!18 juil. 202500:08:32
ஆஸ்திரேலியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிமாற்றங்களுக்கு வணிகர்கள் விதிக்கும் surcharge கூடுதல் கட்டணங்களை நீக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி RBA சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
எச்சரிக்கை! நீரிழிவு நோயை குறைத்து மதிப்பிடாதீர்கள்18 juil. 202500:10:56
ஆஸ்திரேலியாவில் தேசிய நீரிழிவு நோய் வாரம் (ஜூலை 13 - 19) கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் சிற்றம்பலம் ராகவன் அவர்களின் கருத்துக்களையும், பரமேஸ்வரன் முத்துத்தம்பி அவர்களின் அனுபவத்தையும் கேட்கலாம். நிகழ்ச்சியாக்கம்: செல்வி.
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்18 juil. 202500:08:21
இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரசு கையகப்படுத்திய காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்; செம்மணி மாத்திரமல்ல நடந்த ஒவ்வொரு சம்பவமும் சரியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருப்பது; பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு17 juil. 202500:07:42
சிரியாவில் மீண்டும் ஆயுத மோதல்; ஈராக்கில் தீ விபத்து; காசா போர்; உக்ரைன் - ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்; இந்தியா- சீனா இடையே சுமூக உறவு?; ஈரானிலிருந்து ஆப்கான் அகதிகள் வெளியேற்றம் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
பிரிட்டனில் மரத்தை வெட்டிய இருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை!17 juil. 202500:02:33
பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற Sycamore Gap மரத்தை வெட்டியதற்காக இரண்டு பேருக்கு தலா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் தமிழ்நாட்டின் முத்துலட்சுமி!17 juil. 202500:05:47
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தேவதாசி முறையை ஒழித்தவரும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி அம்மையார் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.
முதல் முறையாக மலேசியாவில் சிறுவர் பாடல்கள் இறு வெட்டு17 juil. 202500:12:35
நாம் வளரும் போது, சிறுவர் பாடல்கள் பாடியிருக்கிறோம். அதில் எத்தனை தமிழில் இருந்தன? ஒரு மலேசிய இளம் இசைக்குழு அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான சிறுவர் பாடல்கள் அடங்கிய இறு வெட்டை 2013ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. இந்த இறுவெட்டின் தயாரிப்பின் மூலகர்த்தா காயத்திரி வடிவேல் அவர்களுடனும் அந்த இறுவெட்டில் பாடியிருந்த ஒரு சிறுவர், விஷ்ணுவுடனும் குலசேகரம் சஞ்சயன் 2014ஆம் ஆண்டில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.
ஒரு கோடிக்கும் அதிகமான புகைபிடி சாதனம் Vapesகளை அரசு பறிமுதல் செய்துள்ளது17 juil. 202500:04:18
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 17/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
சீனா கைவிட்டால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் இடிந்து விழுமா?17 juil. 202500:10:41
சீன-ஆஸ்திரேலிய உறவு சுமூக நிலைக்கு வந்தாலும், ஒருவேளை சீனா மீண்டும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தை கடுமையாக கட்டுப்படுத்தினால், ஆஸ்திரேலியாவின் வளம் இடிந்து விழுமா என்ற கேள்விக்கு பொருளாதார நிபுணர்கள் தரும் பதில்களுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. தயாரித்தவர்: றைசெல்.
Causes and consequences: Do we all have the capacity for hatred? - SBS Examines : நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா?16 juil. 202500:07:19
In this new series, Understanding Hate, we unpack the forces driving division, and ask what it takes to protect social cohesion. - 'வெறுப்பைப் புரிந்துகொள்வது' என்ற இந்தத் தொடரில், சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க என்ன தேவை என்பதைப் பற்றி முதல் பாகத்தில் ஆராய்வோம்.
டெரர்கிராமை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஆஸ்திரேலிய அரசு!16 juil. 202500:02:32
டெரர்கிராமை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஆஸ்திரேலிய அரசு அண்மையில் பட்டியலிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் வீடு வாங்குபவர்களுக்கு கிடைக்கும் அரச உதவிகள் எவை?16 juil. 202500:16:42
ஆஸ்திரேலியாவில் தமது முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கு கிடைக்கின்ற அரச உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றி விளக்குகிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
பராமரிப்பு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?16 juil. 202500:11:34
தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தைகளை, ஒரு ஆண் பராமரிப்பாளர் துன்புறுத்திய செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு மையங்கள் தங்கள் நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒரு மைய உரிமையாளருக்கு, இந்த சம்பவம் ஒரு பொறுப்புணர்வு தருணம் மட்டுமல்ல - தீர்க்கமாக செயல்படுவதற்கான ஒரு அழைப்பும் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பிறகு தங்கள் செயல்பாடுகளில் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து Blairmount kids learning academy என்ற பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் கிருஷ்ணபவானி அண்ணாமலையுடன் குலசேகரம் உரையாடுகிறார். ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் மேற்பார்வை முதல் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் குடும்பங்களுடனான தொடர்பு வரை, நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பொறுப்புணர்வை உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் நல்வாழ்வும் மிக முக்கியமான சூழலை உருவாக்கவும் தங்கள் மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கிருஷ்ணபவானி பகிர்ந்து கொள்கிறார்.
பிரதமரின் சீனப் பயண நிறைவில்: சீனா-ஆஸ்திரேலியா வர்த்தக உறவு உறுதியாகியது!16 juil. 202500:05:04
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 16/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
பாலை நாம் ஏன் சமையலறை கழிவுநீர் தொட்டியில் கொட்டக்கூடாது?15 juil. 202500:08:18
சிட்னியில் வசிக்கும் 69 சதவீத மக்கள் தாங்கள் பயன்படுத்தாத பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது சரியென்று நினைப்பதாக Sydney Waters நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆனால் பாலை சமையலறை தொட்டியில் ஊற்றுவது கழிவுநீர் வடிகால் அமைப்பில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி15 juil. 202500:06:29
தமிழ்நாட்டில் மதிமுகவில் உட்கட்சி பூசல், ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு, பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா, தேர்தல் பணிகளை தொடங்கிய ஆளும் திமுக உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் போலி சான்றிதழ்களை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு15 juil. 202500:02:36
குழந்தை பராமரிப்பு மற்றும் மனநலம் முதல் பொறியியல் வரை போலி டிப்ளோமாக்களை வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித்தகைமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
'இப்போது உள்ள கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு' - B.சரோஜாதேவி15 juil. 202500:10:00
'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் நிறைவு பாகம்.
How is alcohol regulated and consumed in Australia? - ஆஸ்திரேலியாவில் மது தொடர்பில் உள்ள கட்டுப்பாடுகள் எவை?15 juil. 202500:10:36
In Australia, alcohol is often portrayed as part of social life—especially at BBQs, sporting events, and public holidays. Customs like BYO, where you bring your own drinks to gatherings, and 'shouting' rounds at the pub are part of the culture. However, because of the health risks associated with alcohol, there are regulations in place. It’s also important to understand the laws around the legal drinking age, where you can buy or consume alcohol, and how these rules vary across states and territories. - ஆஸ்திரேலியாவில் மதுப்பாவனை மற்றும் அதை வடிவமைக்கும் விதிகள் தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
'நான் எப்போதும் கதாநாயகியாகவே நடித்துள்ளேன்' - B.சரோஜாதேவி15 juil. 202500:11:32
'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் இரண்டாம் பாகம்
காலநிலை அச்சுறுத்தல்: பூர்வீகக்குடி மக்களுக்கு அரசு ஆவன செய்ததா என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்15 juil. 202500:04:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 15/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
‘நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை’ - B.சரோஜாதேவி14 juil. 202500:14:50
'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்று புகழப்பட்ட முன்னணி திரைப்பட நடிகை பி. சரோஜா தேவி அவர்கள், 87வது வயதில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) காலமானார். மூன்று தலைமுறைகளைக் கடந்து திரைத்துறையில் ஒளிர்ந்த அவர், தனது திரைப்படப் பயண அனுபவங்களை நம்மோடு 2015 ஆம் ஆண்டு மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அந்த உரையாடலை நிகழ்த்தியவர் செல்வி. நடிகை சரோஜாதேவி அவர்களுடனான செவ்வியின் முதல் பாகம்.
தெற்கு ஆஸ்திரேலியா வாகன விபத்தில் சர்வதேச மாணவர் பலி!14 juil. 202500:02:12
தெற்கு ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சர்வதேச மாணவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
நாட்டில் அதிக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் யார்?14 juil. 202500:02:42
ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம்( ATO) வெளியிட்ட தரவுகள் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் Tradie Jobs எவையென்பதை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
ஏன் GSTஐ அதிகரிக்க வேண்டும்?14 juil. 202500:08:14
25 ஆண்டுகளுக்கு முன்னர் Goods and Services Tax, அல்லது GST என்ற பொருட்களுக்கும் சேவைகளுக்குமான வரி இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசின் நிதி நிலை கட்டமைப்பில் இருக்கும் பற்றாக்குறையைக் குறைக்க, அதன் வருவாயை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதன் ஒரு வழியாக GSTஐ 10 சதவீதத்திலிருந்து உயர்த்துவது குறித்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆளும் Labor கட்சி அரசியல்வாதிகள் அதிக ஆர்வம் காட்டாவிட்டாலும், அதை அதிகரிப்பது நல்லது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
ஐரோப்பா மற்றும் மெக்ஸிகோ மீது 30% இறக்குமதி வரி: டிரம்ப் அறிவிப்பு14 juil. 202500:04:46
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 14/07/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு14 juil. 202500:09:25
இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து முதல் கட்ட அறிக்கை வெளியீடு - அதிர்ச்சி தகவல்கள்; திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னையில் நடைபெற்ற முதல் போராட்டம் - விஜய் அதிரடி பேச்சு; தமிழக பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது. `ப' வடிவில் மாறும் பள்ளி இருக்கைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS 50: எங்கள் எண்ணத்தில் SBS ஒலிபரப்பின் பயணம்13 juil. 202500:13:56
SBS தமிழ் ஒலிபரப்பு வழங்கிவரும் SBS 50 எனும் கொண்டாட்டத் தொடரின் நிறைவு நிகழ்ச்சி. SBS நிறுவனம் 50 ஆண்டுகளாக பல்லின, பன்மொழி ஊடகமாக வளர்ந்து, இன்று உலகின் மிகப்பெரிய பன்மொழி ஊடகமாக திகழும் இவ்வேளையில் நம்முடன் பணியாற்றிய செய்தியாளர்கள் முன்வைக்கும் கருத்துக்கள். கருத்துக்களை முன்வைப்பவர்கள்: அபிராமி, விக்ரமசிங்கம், மேகா, செல்வநாதன் ஆகியோர். தயாரிப்பு: றைசெல்.
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு11 juil. 202500:06:00
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 – 12 ஜூலை 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஜூலை 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
© My Podcast Data · Independent project · Data from Apple & Spotify