Retour
Explorez tous les épisodes du podcast SBS Tamil - SBS தமிழ்
Plongez dans la liste complète des épisodes de SBS Tamil - SBS தமிழ். Chaque épisode est catalogué accompagné de descriptions détaillées, ce qui facilite la recherche et l'exploration de sujets spécifiques. Suivez tous les épisodes de votre podcast préféré et ne manquez aucun contenu pertinent.
| Titre | Date | Durée | |
|---|---|---|---|
| இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி | 07 May 2025 | 00:08:26 | |
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மோடி அரசு ஒப்புதல்; தன்னைக் கொல்ல சதி நடந்ததாக கூறிய மதுரை ஆதீனம்; கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் என்று சகாயம் IAS கூறுவது; இந்தியாவில் 88 சதவீத குடும்பங்களுக்கு கார் வாங்கும் வசதி இல்லை என்ற கருத்து; இந்தியா முழுவவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன். | |||
| முக்கிய கட்சிகள் அல்லாதவர்களுக்கு இந்த தேர்தலில் என்ன நடந்தது? | 07 May 2025 | 00:07:53 | |
கடந்த சனிக்கிழமை நடந்த பெடரல் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகும் நிலையில் கிரீன்ஸ் மற்றும் சுயேட்சை போட்டியாளர்களின் தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி. | |||
| புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எதிர்க்கட்சி தலைவராக Sussan Ley இருப்பார் | 05 May 2025 | 00:04:38 | |
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/05/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி. | |||
| The legal loophole allowing political lies during elections - SBS Examines : ஆஸ்திரேலியாவில் தேர்தல் சமயங்களில் பொய் விளம்பர பிரச்சாரங்கள் சாத்தியமா? | 14 Apr 2025 | 00:09:03 | |
With an election date set for May 3rd, campaigning has officially begun. But political advertisements have already been circulating for months. Can you trust what they say? - Federal தேர்தல் அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்து வகையான விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன. அந்த விளம்பரங்கள் சொல்லும் அனைத்தையும் நம்பலாமா? | |||
| ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் | 14 Apr 2025 | 00:07:52 | |
'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் எதிர்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல். | |||
| சிட்னி மக்களை, சித்திரைத் திருவிழாவில் மயக்க வருகிறார் புரட்சிமணி ! | 14 Apr 2025 | 00:13:58 | |
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, கிராமிய இசைக்கலைஞர் புரட்சிமணி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். | |||
| தேர்தல் பிரச்சாரங்கள் நடுப் புள்ளியை எட்டியது! | 14 Apr 2025 | 00:08:30 | |
தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் நாள் வரையான காலத்தின் நடுப்புள்ளியில் நாம் இருக்கிறோம். கடந்த இரண்டரை வாரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். | |||
| ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: செனட் (Senate) | 14 Apr 2025 | 00:12:05 | |
ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான செனட் அவையிலுள்ள செனட்டர்கள் எப்படி தெரிவு செய்யப்படுகின்றனர் என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். | |||
| இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு | 14 Apr 2025 | 00:09:40 | |
இந்தியாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம்; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் உறுதியானது அதிமுக- பாஜக கூட்டணி; சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு; பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம் - கடும் உட்கட்சி மோதலில் பாமக; இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்! | |||
| அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கக்கோரி சிட்னியில் பேரணி! | 14 Apr 2025 | 00:04:30 | |
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம். | |||
| Beyond books: How libraries build and support communities in Australia - ஆஸ்திரேலியாவிலுள்ள நூலகங்கள் வழங்கும் சேவைகள் எவை? | 13 Apr 2025 | 00:10:14 | |
Australian public libraries are special places. Yes, they let you borrow books for free, but they also offer a wealth of programs and services, also free, and welcome everyone, from tiny babies to older citizens. - ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகங்கள் வழங்கும் பரந்த அளவிலான சேவைகள் தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு | 12 Apr 2025 | 00:05:24 | |
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (6 ஏப்ரல் – 12 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 12 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல். | |||
| Monash IVF மையத்தின் கவனக்குறைவால் வேறொவரின் கருவை பெற்றெடுத்த பெண் - குழந்தை யாருக்கு சொந்தம்? | 11 Apr 2025 | 00:07:07 | |
Monash IVF மையத்தில் செயற்கை முறையில் கருவுறுதல் சிகிச்சை பெற்று கொண்ட பெண் ஒருவருக்கு அத்தம்பதியினரின் கருவிற்கு பதிலாக தவறுதலாக வேறொரு தம்பதியினரின் கரு அவரின் கருப்பையில் வைக்கப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. தவறாக வைக்கப்பட்ட கருவை சுமந்து அப்பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி. | |||
| இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு | 05 May 2025 | 00:09:44 | |
கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான 'நீட்'; சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடியை பிரதமர் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு; உச்சகட்ட மோதலில் திமுக மற்றும் தமிழக ஆளுநர்; தமிழகத்தை உலுக்கிய இரட்டை கொலை; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்! | |||
| 'பீட்டர் டட்டனை குறிவைத்து பயங்கரவாத சதித்திட்டம்'-மாணவன் மீது வழக்கு | 11 Apr 2025 | 00:02:07 | |
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனை குறிவைத்து பயங்கரவாத சதித்திட்டம் தீட்டியதாக மாணவன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள் | 11 Apr 2025 | 00:08:34 | |
முன்னாள் அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது; அமெரிக்காவின் அதிகரித்த வரி விதிப்பு தொடர்பில் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். | |||
| சீனா மீதான வரியை அமெரிக்கா 145 சதமாக உயர்த்தியது! | 11 Apr 2025 | 00:04:54 | |
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி. | |||
| பேராசிரியராக இருந்த நான் ஏன் துப்புரவுத் தொழிலாளியாக மாறினேன்? - ரயீஸ் முகமது | 10 Apr 2025 | 00:14:16 | |
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் முனைவர் ரயீஸ் முகமது அவர்கள். தூய்மைப் பணி தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட அவர், பின்னர் அதே தூய்மைப் பணியில் இறங்கினார். Kotagiri Septic Tank Cleaning Services என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ரயீஸ் முகமது, தலித் கேமரா எனும் சமூக ஊடக முன்னெடுப்பின் மூலமாகவும் அறியப்படுகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் தென்னாப்பிரிக்காவின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வாளராகவும் பணியாற்றியவர் ரயீஸ் முகமது அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன். | |||
| விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன? | 10 Apr 2025 | 00:13:01 | |
விலைவாசி உயர்வு என்பது அனைத்து கட்சிகளாலும், சுயேட்சை உறுப்பினர்களாலும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் Cost of Living எனப்படும் விலைவாசி உயர்வு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிவரும் முரளி அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல். | |||
| What’s Australia really like for migrants with disability? - SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை? | 10 Apr 2025 | 00:07:56 | |
Disability advocates and experts say cultural stigma and migration laws leave migrants living with disability further excluded and marginalised. - மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது. | |||
| லேபரின் சோலார் பேட்டரி கொள்கையும், பிற கட்சிகளின் எரிசக்தி கொள்கையும் | 10 Apr 2025 | 00:07:04 | |
லேபர் அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வீடுகளில் சோலார் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சேமிக்க பேட்டரிகளை ஒருவர் வாங்கும்போது அரசு 30% மானியம் வழங்கும் என்று லேபர் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் எரிசக்தி விலை குறைப்பில் லிபரல்-நேஷனல் எனும் Coalitionயின் பார்வை, கிரீன்ஸ் கட்சியின் பார்வை என்ற தகவல்களோடு செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. | |||
| மறைந்தார் குமரி அனந்தன்: 2011 ஆண்டில் SBS தமிழில் படைத்த இலக்கிய விருந்து! | 10 Apr 2025 | 00:13:47 | |
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் அவர்கள் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்; தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக 'இலக்கியச் செல்வர்' என்று பாராட்டப்பட்டவர். இந்திய நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசி சாதனை படைத்தவர் குமரி அனந்தன் அவர்கள். அவர் SBS தமிழ் ஒலிபரப்புக்கு 2011 ஆம் ஆண்டு இலக்கிய விருந்து படைக்கும் நேர்முகம் ஒன்றை தொலைபேசி வழி வழங்கியிருந்தார். அந்த நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு இது. அவரோடு உரையாடியவர்: றைசெல். | |||
| ஆஸ்திரேலியாவில் புறா வளர்த்து, (புறா) பறக்கும் போட்டியில் வெற்றிபெறும் தமிழர் | 10 Apr 2025 | 00:12:48 | |
வீடுகளில் பலர் நாய் பூனை மீன் போன்றவற்றை வளர்ப்பதை நாம் அறிவோம்... ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Rockhampton என்ற இடத்தில் வசிக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் இளைஞர், புறா வளர்க்கிறார். அது மட்டுமன்றி அந்தப் புறாக்கள் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயிற்சியும் கொடுக்கிறார். புறா வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் 2021ஆம் ஆண்டு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது. | |||
| குழந்தைப் பராமரிப்பு மையங்களில் முறைக்கேடுகள் : விசாரணை தேவை - கிரீன்ஸ் | 10 Apr 2025 | 00:08:36 | |
Child care குழந்தைப் பராமரிப்புத் துறையில் நிலவும் பிரச்சனைகளை சமீபத்திய புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியதை தொடர்ந்து குழந்தைப் பராமரிப்புத் துறை தொடர்பான ராயல் கமிஷன் விசாரணை தேவை என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து SBS News-இற்காக Tallulah Brassil ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி. | |||
| லேபர் வெற்றி, லிபரல் தோல்வி: தமிழர்கள் சிலர் என்ன நினைக்கின்றனர்? | 04 May 2025 | 00:13:13 | |
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முடிவை எப்படி பார்க்கின்றீர்கள் என்ற கேள்வியை சிலரிடம் முன்வைத்தோம். தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நேற்று (ஞாயிறு) நடத்திய சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்துகொண்ட அனகன்பாபு, கார்த்திகா, நிமலேந்திரன், முனைவர் பாலு விஜய் ஆகியோர் பதில் தருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது முக்கிய கட்சிகள் முன்வைத்த கொள்கைகளை நமது நேயர்களுக்காக விளக்கிய ஆஸ்திரேலிய அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிவரும் முரளி அவர்களும், ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். | |||
| நாடுகளுக்கு வரிவிதிப்பிலிருந்து 90 நாட்களுக்கு விலக்கு, ஆனால் சீனாவுக்கு வரி அதிகாரிப்பு - Trump | 10 Apr 2025 | 00:04:21 | |
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல். | |||
| ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: பிரதமர் Anthony Albanese | 09 Apr 2025 | 00:05:40 | |
'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் பிரதமர் Anthony Albanese பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல். | |||
| இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி | 09 Apr 2025 | 00:08:34 | |
தமிழக ஆளுநர் தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிய தலைமை; மத்திய பிரதேசத்தில் பாதிரியர்கள் மீது தாக்குதல்; தொடரும் வக்பு வாரிய மசோதா விவாதம், மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விவாதம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன். | |||
| சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் பாட வருகிறார் தேவக்கோட்டை அபிராமி! | 09 Apr 2025 | 00:06:55 | |
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாட்டுப்புற இசைக்கலைஞர் தேவக்கோட்டை அபிராமி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| Coalition ஆட்சியில் சர்வதேச மாணவர் எண்ணிக்கை 80 ஆயிரத்தால் குறைக்கப்படும்- Dutton அறிவிப்பு | 09 Apr 2025 | 00:07:31 | |
தாம் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தால் குறைக்கப்படும் என Coalition- எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| லேபர், லிபரல் கட்சி தலைவர்கள் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்! | 09 Apr 2025 | 00:04:47 | |
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 09/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி. | |||
| தாயகம் சென்றபோது கொலைசெய்யப்பட்ட குயின்ஸ்லாந்துப் பெண்- பிந்திய தகவல்கள் | 08 Apr 2025 | 00:02:40 | |
குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் பங்களாதேஷில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி குறித்த பிந்திய விவரங்களைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| தேர்தல் போட்டியில் லேபர் கட்சி முன்னிலை : புதிய கருத்துக்கணிப்பு முடிவு | 08 Apr 2025 | 00:02:39 | |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் Roy Morgan ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவில் ஆளும் லேபர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| மனநல சேவைகளுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் ஒதுக்குவதாக அரசு உறுதியளித்தது | 08 Apr 2025 | 00:05:46 | |
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 08 ஏப்ரல் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். | |||
| ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் முறை அறிவோம்: House of Representatives | 07 Apr 2025 | 00:10:04 | |
ஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமான House of Representatives எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்தல் நடைபெறும் பின்னணியில் மக்கள் பிரதிநிதிகள் சபை குறித்த விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். | |||
| தொடரும் லேபர் கட்சியின் ஆட்சி: விரிவான பார்வை | 03 May 2025 | 00:07:28 | |
ஆஸ்திரேலியாவில் நேற்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்று லேபர் ஆட்சி தொடர்கிறது. இது குறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றைசெல். | |||
| 'என்னை நாடு கடத்த வேண்டாம்' - ஈழத்தமிழ் அகதி பாஸ்கரன் குமாரசாமி | 07 Apr 2025 | 00:15:58 | |
இந்தியாவிற்குப் புகலிடம் தேடி 2004 ஆம் ஆண்டு சென்ற இலங்கைத் தமிழ் அகதியான பாஸ்கரன் குமாரசாமி, கடந்த 21 ஆண்டுகள் இந்திய மண்ணில் கழித்துள்ளார். தொடர்ச்சியான முரண்பாடான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகள் காரணமாக அவரது அகதி நிலை நிச்சயமற்றதாகவே உள்ளது. அவர் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அவரது எதிர்காலம் ஊசலாட்டத்தில் உள்ளது. | |||
| சிட்னியில் சித்திரைப் புத்தாண்டு விழா! | 07 Apr 2025 | 00:13:25 | |
சிட்னி தமிழ் அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் ஆதரவோடு தாயகம் குழுமம் வழங்கும் “சித்திரைப் புத்தாண்டு விழா” ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிட்னியின் Merrylands நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கலந்துரையாடுகின்றனர்: பாலா விக்னேஸ்வரன் (தாயகம் வானொலி) & சிவா சிவராஜ் (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். | |||
| தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்குகின்றன ! | 07 Apr 2025 | 00:10:48 | |
நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் தேதி நடக்க இருக்கும் பின்னணியில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். | |||
| இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு | 07 Apr 2025 | 00:12:02 | |
இந்தியாவில் கடும் எதிர்ப்பு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்; தமிழகத்தில் நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலத்திற்குப் பதிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் திறப்பு; 2026 நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி; பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? - இவை உள்ளிட்ட செய்திகளோடு 'செய்திகளின் பின்னணி' நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்! | |||
| வீட்டிலிருந்து வேலை செய்வது முடிவுக்கு வரும் எனும் கொள்கையை கைவிடுகிறோம் - Peter Dutton | 07 Apr 2025 | 00:04:28 | |
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 07 ஏப்ரல் 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். | |||
| இந்திய பிரதமரின் இலங்கைப் பயணம் – விரிவான தகவல் | 06 Apr 2025 | 00:06:35 | |
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இந்த பயணத்தில் அவர் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதுடன், வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். குறிப்பாக, இந்திய உதவியில் அமைக்கப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் கையளித்தார். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். | |||
| ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு | 05 Apr 2025 | 00:06:17 | |
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (30 மார்ச் – 05 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 05 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல். | |||
| How to vote in the federal election - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி? | 04 Apr 2025 | 00:09:27 | |
On election day the Australian Electoral Commission anticipates one million voters to pass through their voting centres every hour. Voting is compulsory for everyone on the electoral roll, so all Australians should familiarise themselves with the voting process before election day. - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் 4 வாரங்களே உள்ள பின்னணியில், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது! | 04 Apr 2025 | 00:02:38 | |
ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம். | |||
| இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள் | 04 Apr 2025 | 00:08:36 | |
இந்திய பிரதமர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார்; சூடுபிடிக்கும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார பணிகள்; ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சில அரசியல் தலைவர்கள் கைது; தொடரும் விசாரணைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். | |||
| ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு | 02 May 2025 | 00:04:48 | |
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (27 ஏப்ரல் – 03 மே 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 03 மே 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல். | |||
| MCG மைதானத்திற்குள் துப்பாக்கிகளை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது | 03 Apr 2025 | 00:05:38 | |
ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 04 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். | |||
| அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதி வரி ஆஸ்திரேலியாவை பாதிக்குமா? | 03 Apr 2025 | 00:08:54 | |
அமெரிக்கா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு புதிய வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய பொருட்கள் மீது 10 சதவீத வரி அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி. | |||
| நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தின் உருவாக்கமும் பின்னணியும் | 03 Apr 2025 | 00:07:12 | |
இசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிராபாகரன். | |||
© My Podcast Data · Projet indépendant · Données issues d'Apple & Spotify