Retour

Explorez tous les épisodes du podcast Quran Circle Tamil

Plongez dans la liste complète des épisodes de Quran Circle Tamil. Chaque épisode est catalogué accompagné de descriptions détaillées, ce qui facilite la recherche et l'exploration de sujets spécifiques. Suivez tous les épisodes de votre podcast préféré et ne manquez aucun contenu pertinent.

Rows per page:

1–50 of 68

TitreDateDurée
மறுமையில் காப்பாற்றும் சூராக்கள்30 avr. 202200:13:59

மறுமையில் காப்பாற்றும் சூராக்களுடைய சிறப்புகள் 

சூரா அல் பகரா 

சூரா ஆல இம்ரான் 

சூரா இக்லாஸ் 

ஆயத்துல் குர்ஸி 

சூரா அல் முல்க் 

லைலத்துல் கத்ர் - ஒரு நினைவூட்டல்23 avr. 202200:14:01
  1. முடிந்த அளவு நின்று வணங்குங்கள்
  2. லைலத்துல் கத்ர் இரவின் ஆரம்பம் மஃரிப்
  3. இஷாவையும் பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுங்கள்
  4. இமாமுடன் இரவுத் தொழுகைகளை தொழுங்கள்
  5. சிறிய துஆக்களை அதிகமாக ஓதுங்கள்
  6. லைலத்துல் கத்ருடைய இரவுக்கு உயிர் கொடுங்கள்
  7. கவனச்சிதறல் ஏற்படுத்துபவைகளை அகற்றுங்கள் 
நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்10 avr. 202200:10:56
  1. தள்ளாத வயதினர்
  2. நோயாளிகள்
  3. பயணிகள்
  4. மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
  5. கர்ப்பிணிப் பெண்களுக்கும், 
  6. பாலூட்டும் அன்னையருக்கும் 

நோன்பை விட்டுவிட சலுகை உண்டு

நோன்பை விடுவதற்குப் பரிகாரம்10 avr. 202200:04:55

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்து வந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.

நூல் : புகாரி 4507

நோன்பு துறத்தல்04 avr. 202200:04:58

பேரிச்சம்பழம் கொண்டுதான் நோன்பு துறக்க வேண்டுமா?

நோன்பு துறப்பதற்கு முன் ஓதும் துஆ என்ன?

நோன்பு திறந்தப்பின் ஓதும் துஆ என்ன?

நோன்புடைய நிய்யத்04 avr. 202200:05:03

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 1


ஸஹர் நேர தவறுகள்03 avr. 202200:08:43
  • ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
  • விடி ஸஹர் கூடுமா?
  • ஸஹர் நேரத்தில் அதிகமாக சாப்பிடலாமா? 
ஸஹர் உணவு03 avr. 202200:03:42

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1923


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 576, 1134, 1921, 575

நோன்பின் நேரம்03 avr. 202200:06:36

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!

பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

திருக்குர்ஆன்  2:187


நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: புகாரி 1957

ரமலானின் சிறப்புகள்02 avr. 202200:11:22

ரமலான் மாதம் எத்தகையது என்றால் நேர்வழியை தெளிவுபடுத்தி (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக்காட்டக்கூடிய குர்ஆன் அம்மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழியாக அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர்கள் அதில் நோன்பு நோற்க வேண்டும்.
அல்குர்ஆன் (2:186)

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் (97 :1-5)

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்27 mars 202200:07:16

நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான். 

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 

  • நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். 
  • தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் 

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1904

நோன்பின் போது கடைபிடிக்க வேண்டியவை27 mars 202200:03:20

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் 

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1903

நோன்பின் நோக்கம்27 mars 202200:06:16

நம்பிக்கை கொண்டோரே! 

நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 

[அல்குர்ஆன் 2:183]

வியத்தகு குர்ஆன் - பகுதி 8 [குர்ஆனின் மொழி]19 déc. 202100:19:07

சஹாபாக்கள் அரபு மொழியின்  வீழ்ச்சியை ஆரம்ப காலத்திலேயே கவனித்தனர். அலி (ரலி) அவர்கள் அவருடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை  அரபு குழந்தைகள் விளையாடும்போது  ஒருவருக்கொருவர் பேசுவதையும் பார்த்து, இவர்கள் பேசுவது அரபுகளுடைய மொழி இல்லை என்று கூறினார்.


நபியவர்கள் காலத்திற்கு  பிறகு இஸ்லாத்தில் மூன்று பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றுகிறது 

1. குர்ஆனைப் பாதுகாக்கவும்

2. ஹதீஸைப் பாதுகாக்கவும்

3. அரபு மொழியைப் பாதுகாக்கவும்


அந்த காலகட்டத்தில் நல்ல தூயமையான  அரபியைப் பெற விரும்பினால், பாலைவனத்திற்கு சென்று அங்கிருக்கக்கூடிய  நாடோடி மற்றும் கிராமத்து  அரேபியர்களிடத்தில் பேச வேண்டும். இமாம் ஷாபி, அஸ்மாயீ போன்றவர்கள் அந்த மொழியை அதன் தூய்மையில் வடிவத்தில் பாதுகாக்க நிறைய இதுபோன்ற பயணங்களை மேற்கொண்டனர்.

வியத்தகு குர்ஆன் - பகுதி 7 [தொன்மையான அரபு மொழி]05 déc. 202100:12:26

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பேசப்பட்ட அரபு மொழி, மிக வளமான செம்மொழியாக இருந்தது. 

அந்த தொன்மையான அரபு மொழியில் தான் குர்ஆன் அருளப்பட்டது.

நவீன காலத்து அரபு மொழிக்கும், பழமையான அரபு மொழிக்கும் மிகப்பெரும்  வித்த்தியாசங்கள் உள்ளன. 

வியத்தகு குர்ஆன் - பகுதி 6 [அரபு மொழி]20 nov. 202100:13:18

மூன்று வகையான அரபு மொழி

  1. பேச்சுவழக்கு அரபு மொழி [عامية] Spoken Arabic
  2. முறையான சரியான அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَالمُعَاصَِةُ] Formal Arabic
  3. பண்டைய/பழைய அரபு மொழி [العَرَبِيَّةُ الفُصْحَةُ القَدِيَْةُ] Old Arabic/ Classical Arabic/ Ancient Arabic
வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்]14 nov. 202100:10:55
ஆயா என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல்
வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்]14 nov. 202100:08:16

குர்ஆனின் பார்வையில் ஆயத்

எதுவெல்லாம் ஆயத்? 

எதுவெல்லாம் ஆயத் இல்லை?

வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்]14 nov. 202100:06:38

ஆயா என்றால் என்ன?

ஆயாவை ‘வசனம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?

ஆயாவை வாக்கியம் என்றோ அல்லது வரி என்றோ ஏன் மொழிபெயர்க்க முடியாது?

  • ஒவ்வொரு ஆயாவும் ஒரு வர்த்தயை விடவோ

அல்லது ஒரு வாக்கியத்தை விடவோ  சிறியதாக இருக்கலாம்

அல்லது பல ஆயத்துக்கள் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம் 

அல்லது பல வாக்கியங்கள் சேர்ந்தது கூட ஒரு ஆயத்தாக இருக்கலாம்.

வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா]07 nov. 202100:09:58

சூரா என்றால் என்ன?

·  குர்ஆன் 114 சூராக்களால் ஆனது

·  சூராவை ‘அத்தியாயம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது?

·  ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் மீண்டும்  மீண்டும் வராது.

·  ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் முந்தைய அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

·  சூராக்களைப் போல் அல்லாமல் அத்தியாயங்கள் ஒரு காலவரிசை வரிசையில் அமைந்திருக்கும்.

·  அத்தியாயங்களின் வரிசையை மாற்றினால் ஒரு புத்தகம் அர்த்தமற்றுப் போய்விடும். ஆனால் சூராக்கள் அப்படியல்ல.

·  சூராக்கள் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்படவில்லை.

·  குர்ஆனுக்கென்று ஒரு தனிப்பட்ட அமைப்பு உள்ளது.

·  அத்தியாயங்களின் தலைப்பு அந்த அத்தியாயத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும். ஆனால் ஒரு சூராவின் தலைப்பு அந்த சூரா முழுவதும் பேசப்படுவதில்லை.

·  எனவே, நீங்கள் குர்ஆனை வேறு எந்த இலக்கியங்களுடனும் ஒப்பிட முடியாது. குர்ஆனுக்கு அல்லாஹ் வகுத்த அதன் சொந்த தரநிலை உள்ளது.

வியத்தகு குர்ஆன் - பகுதி 1 [இலக்கியம்]07 nov. 202100:10:01

அல்குர்ஆன் ஒரு அழகிய இலக்கியம்

வியத்தகு குர்ஆன் - தொடர் அறிமுகம்01 nov. 202100:05:01

குர்ஆனுடைய  மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது  உங்களுக்குள் பல கேள்விகள் எழும் 

• ஏன் குர்ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட செய்திகள் திரும்பத் திரும்ப மற்ற இடங்களில் வருகிறது?

• ஏன் குர்ஆன் ஒரு காலவரிசைப்படி இல்லை?

• ஏன்  சில அத்தியாயங்கள் சிறியதாகவும், சில நீளமாகவும் உள்ளன?

• அத்தியாயங்களும் ஏன் ஒரு பொருள் வரிசைப்படி இல்லை?

• குர்ஆனில் சொல்லப்படும் கதைகளும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிறது. ஏன் ஒரு தொடராக இல்லை?

இப்படி குர்ஆனை படிக்கும் போது உங்கள்  மனதில் தோன்றும் கேள்விகள் மற்ற புத்தகங்களை படிக்கும்போது  இருப்பதில்லை. ஏன்?

உண்மையிலேயே இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான்  குர்ஆனை தனித்துவமாக்குகிறது மற்றும் இந்த குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதற்க்கான பதில்களைத்தான், இந்த தொடர் முழுவதும் விரிவாக கேட்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.


அல்லாஹ்விற்காக அன்பு காட்டுதல்31 oct. 202100:16:00

அல்லாஹ்வின் அடியார்களில் சில மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்படமாட்டார்கள் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.

அறிவிப்பவர் : உமர் பின் அல்ஹத்தாப் (ர­லி) அவர்கள்

நூல் : அபூதாவுத் (3060)

இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள்28 août 202100:17:32

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.

நூல் : புகாரி 1852

முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு16 août 202100:14:56

وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

நூல் : முஸ்லிம்

ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 210 août 202100:18:01
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். நூல்: ஹாகிம் (4287)
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 110 août 202100:11:25
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 9:36)
குர்பானியின் சட்டங்கள் - 519 juil. 202100:11:20

-கூட்டுக் குர்பானி

-எப்போது அறுக்க வேண்டும்?

-குர்பானி கொடுப்பதை குடும்பத்தினர் பார்க்கவேண்டுமா?

-பிராணியை அறுப்பதற்கு முன்பு என்ன கூற வேண்டும்?

-பெருநாள் தினம்  மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

-எப்படி பங்கிட வேண்டும்?

பெருநாள் தொழுகை சட்டங்கள் - 218 juil. 202100:13:27

-ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்

-தொழுகைக்கு முன் சாப்பிடுதல்

-முன் பின் சுன்னத்துகள் இல்லை

-பாங்கு இகாமத் இல்லை

-மிம்பர் இல்லை

-பெருநாள் தொழுகை முறை

-சொற்பொழிவு

-தக்பீரும் துஆவும்


பெருநாள் தொழுகை சட்டங்கள் - 118 juil. 202100:07:27

-பெருநாள் தொழுகையின் நேரம் எது?

-பெண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளலாமா?

-பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழ வேண்டுமா?

அரஃபா தின நோன்பு18 juil. 202100:05:38

அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’

​​அறிவிப்பாளர்: அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு

​நூல்: முஸ்லிம் 2151

அரஃபா தினம்17 juil. 202100:08:01

...இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 

[அல்குர்ஆன் 5:3]

துல்ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்11 juil. 202100:08:40

“ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688)

குர்பானியின் சட்டங்கள் - 410 juil. 202100:05:59
  • நோயுள்ள பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா?
  • குர்பானி பிராணியின் வயது வரம்பு என்ன?
குர்பானியின் சட்டங்கள் - 307 juil. 202100:06:02

குர்பானிப் பிராணிகள் என்னென்ன?

கோழியை குர்பானி கொடுக்கலாமா?

அகீகா என்றால் என்ன?

அகீகா எப்போது கொடுக்க வேண்டும்?

குர்பானியின் சட்டங்கள் - 204 juil. 202100:05:35
  • குர்பானி கொடுப்பது யார் மீது கடமை?


  • கடன் வாங்கி குர்பானி கொடுக்க வேண்டுமா?


  • குர்பானி கொடுக்க நினைப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
குர்பானியின் சட்டங்கள் - 104 juil. 202100:10:33

குர்பானி ஏன் கொடுக்க வேண்டும்?

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

அல்குர்ஆன் (37 : 100-111)

விடைபெறும் ரமலானே!11 mai 202100:15:39

உன் வரவால் மனம் மகிழ்ந்தோம்!

உன் பிரிவால் உளம் நெகிழ்ந்தோம்!

மூன்று வகையினர் - பகுதி 210 mai 202100:17:23
  • பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். [அல்குர்ஆன் 56:46]
  • நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள். [அல்குர்ஆன் 56:52]
  • அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள். [அல்குர்ஆன் 56:54]
  • தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து. [அல்குர்ஆன் 56:56]
மூன்று வகையினர் - பகுதி 109 mai 202100:15:31

(மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.

[அல்குர்ஆன் 56:10]

அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.

[அல்குர்ஆன் 56:11]

இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

[அல்குர்ஆன் 56:12]

அல்லாஹ்வின் வருகை08 mai 202100:17:09

வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது,

[அல்குர்ஆன் 89:22]

வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தமக்கு மேலே எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.

[அல்குர்ஆன் 69:17]

மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 207 mai 202100:19:23

மஹ்ஷரில் 

  1. அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்தவர்களின் நிலை?
  2. கொலையாளிகளின் நிலை?
  3. நீதம் செலுத்தாதவர்களின் நிலை?
  4. வட்டிக்காரர்களின் நிலை?
  5. யாசகம் கேட்பவர்களின் நிலை?
  6. மேசாடி செய்பவர்களின் நிலை?
மஹ்ஷரின் மனிதர்கள் - பகுதி 106 mai 202100:16:50

 எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாச முள்ளவைகளாகவும்,

 சந்தோஷத்தால் சிரித்தவைகளாகவும் இருக்கும்.

 அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

 கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (அதாவது, துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

 இவர்கள்தாம் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.

(அல்குர்ஆன்: 80:38-42)


அல்கவ்ஸர் எனும் நீர் தடாகம்05 mai 202100:17:51

(‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)

இரண்டாம் ஸூர் ஊதப்படும் போது04 mai 202100:18:01

ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

[அல்குர்ஆன் 78:18]

எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?" என்று கேட்பார்கள்.

[அல்குர்ஆன் 36:52]

ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர்விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

[அல்குர்ஆன் 23:101]

முதல் ஸூர் ஊதப்படும் போது03 mai 202100:13:55

ஸூர் ஊதப்படும் அந்நாள் மிகவும் சிரமமான நாள். 

[அல்குர்ஆன் 74:8-9]

அது, உண்மையாகவே பெரும் சப்தத்தை அவர்கள் கேட்கும் நாளாகும் அதுவே வெளிப்படும் நாள்.

[அல்குர்ஆன் 50:42]

தஸ்பீஹ் தொழுகை ஒரு விளக்கம்03 mai 202100:09:48

‎(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி ‎உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் ‎‎(பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் ‎வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎

நூல்: நஸாயீ

பித்அத் மற்றும் நபில் - என்ன வேறுபாடு?02 mai 202100:19:59

லைலத்துல் கத்ர் அமல்கள் என்ற பதிவில் சொல்லப்பட்ட செய்திகளுக்கான விளக்கம்.

1. பித்அத் என்றல் என்ன?

2. சுன்னத்தான வணக்கங்கள் என்றல் என்ன?

3. நபிலான வணக்கங்கள் என்றல் என்ன?

4. நபிலுக்கும் பித்அத்திற்கும் என்ன வேறுபாடு?

5. ஒரே தொழுகையில் ஒரே சூராவை இரண்டுமுறை ஓதலாமா?

6. ஒரே ரக்அத்தில் ஒரே சூராவை பலமுறை ஓதலாமா?  

மறுமை நாள்01 mai 202100:12:46
அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர். நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம். (திருக்குர்ஆன் 70:6,7)
லைலத்துல் கத்ர் அமல்கள்30 avr. 202100:16:52

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: 

எவர்நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

[நூல்: புகாரி 35]

© My Podcast Data · Projet indépendant · Données issues d'Apple & Spotify